இந்திய
புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கேரளா மாநில அரசு
நேற்று (14) வழக்கு தாக்கதல் செய்தது. இதன் மூலம் இச்சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த
முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
கேரள
அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவில் இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற
தன்மையை மீறுவதாகக் கூறியுள்ளதுடன், நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
பிரதமர்
நரேந்திர மோடியின் இந்து தேசியவாதக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இக்குகுடியுரிமைச்
சட்டம் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்கள்
இந்திய பிராஜவுரிமையை பெறும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது.
எனவே,
முஸ்லிம்களுக்கு எதிரான இந்த சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை
மேற்கொண்டு வருகின்றனர். இந்த நாடு தழுவிய போராட்டங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிறப்பு
சான்;றிதழ் உள்ளிட்ட உத்தியோகபு+ர்வ பதிவுகள் பலரிடமும் இல்லாத இந்தியாவில், அனைத்து
இந்தியர்களும் தமது இந்திய பூர்விகத்தை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று
கோருகின்ற இன்னனுமொரு சட்டத்துடன் இணைத்துப் பார்க்கையில், முஸ்லிம்களை நாடற்றவாகளாக்கும்
முயற்சி என்று இது பார்க்கப்படுகின்றது.
இதேநேரம்
இப்புதிய குடியுரிமை சட்டத்தை தாம் அமுல்படுத்தப் போவதில்லை என்று இந்தியாவின் பல மாநிலங்கள்
அறிவித்துள்ளமையானது, நரேந்திர மோடியின் அரசாங்கத்துக்கு பெரும் சவலாக மாறியுள்ளது.
இந்திய
பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சிக்கும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர்; மம்தா
பானர்ஜி, இச்சட்டத்திற்கு எதிராக தனது மாநிலத்தில் பல வெகுஜன பேரணிகளை நடத்தியுள்ளார்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியால் நிர்வகிக்கப்படும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும்
மத்திய பிரதேச மாநிலங்களும் புதிய சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன.
கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியும் இருக்கும் மேற்கு மாநிலமான
மகாராஷ்டிராவிலும் இந்த சட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான்,
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் ஆகிய நாடுகளிலிருந்து 2015 க்கு முன்னர் இந்தியாவுக்கு
வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு
உதவ இச்சட்டம் தேவை என்று மோடியின் அரசாங்கம் வலியுறுத்துகிறது.
ஆனால்,
இலங்கை மற்றும் மியான்மரைச் சேர்ந்த முறையே தமிழ் மற்றும் ரோஹிங்யா அகதிகள் ஏன் இப்புதிய
சட்டத்தில் உள்வாங்கப்படாது, வெளியேற நிறுத்தப்பட்டுள்ளனர் என்று விமர்சகர்கள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக