நீண்ட காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல், லிபியாவின் ஒரு பகுதியை ஆளும் இராணுவ தளபதியான கலீபா ஹப்தர் ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து வெளியேறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் துருக்கி ஆகியோரால் பல மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய உடன்பாட்டு அரசாங்கத்தின் தலைவரான பாயிஸ் அல்சர்ராஜ் ஏற்கனவே கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை பரிசீலனை செய்ய திங்கள்கிழமை மாலை வரை ஹப்தார் நேரம் கேட்டிருந்தார். எனினும், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் ஹப்தர் மொஸ்கொவிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஹப்தர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் வெளியேறியதை லிபிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஒப்பந்த வரைவானது லிபிய இராணுவத்தின் பல கோரிக்கைகளை புறக்கணிக்கிறது என்று ஹப்தர் தெரிவித்ததாக அல்அரேபியா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
ஒப்பந்த வரைவானது லிபிய இராணுவத்தின் பல கோரிக்கைகளை புறக்கணிக்கிறது என்று ஹப்தர் தெரிவித்ததாக அல்அரேபியா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
லிபியாவில் ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலையீட்டில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்த ஒரு நாள் கழித்து ரஷ்ய தலைநகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைகளில் போரிடும் தரப்பினர் நேருக்கு நேர் சந்திக்கவில்லை, ஆனால் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திங்களன்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஹப்தர் போர்நிறுத்த ஆவணத்தை சாதகமாக பார்த்ததாகவும் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக