புதன், 15 ஜனவரி, 2020

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்த கேரள அரசு


இந்திய புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கேரளா மாநில அரசு நேற்று (14) வழக்கு தாக்கதல் செய்தது. இதன் மூலம் இச்சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவில் இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை மீறுவதாகக் கூறியுள்ளதுடன், நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாதக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இக்குகுடியுரிமைச் சட்டம் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்கள் இந்திய பிராஜவுரிமையை பெறும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது.

லிபிய போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வி? ஹப்தர் கைச்சாத்திடாமல் வெளியேறினார்


நீண்ட காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல், லிபியாவின் ஒரு பகுதியை ஆளும் இராணுவ தளபதியான கலீபா ஹப்தர் ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து வெளியேறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் துருக்கி ஆகியோரால் பல மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய உடன்பாட்டு அரசாங்கத்தின் தலைவரான பாயிஸ் அல்சர்ராஜ் ஏற்கனவே கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை பரிசீலனை செய்ய திங்கள்கிழமை மாலை வரை ஹப்தார் நேரம் கேட்டிருந்தார். எனினும், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் ஹப்தர் மொஸ்கொவிலிருந்து வெளியேறியுள்ளார்.

புதன், 20 ஜூன், 2012

அல்ஜீரியாவில் போன்று எகிப்தில் உள்நாட்டுப் போர் வராது: கலாநிதி ஸஃத் அல்கதாத்னீ


எகிப்தை தற்போது ஆட்சி செய்து வரும் இராணுவ சபையோடு அல்ஜீரியாவில் இருபது வருடங்களுக்கு முன்னர் நிழ்ந்தது போன்றதொரு உள்நாட்டுப் போருக்கு இட்டுச் செல்லும் நிலை வராது என்று கலாநிதி ஸஃத் அல்கதாத்னி தெரிவித்துள்ளார். கலைக்கப்பட்ட எகிப்திய பாராளுமன்றத்தின் சபாநாயகரும் சுதந்திதிரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவருமான கதாத்னி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தொடர்ந்தும் பல வருடங்கள் தாம் ஆட்சியில் இருக்க முடியும்படி பல புதிய திருத்தங்களை இராணுவ சபை மேற்கொண்டுள்ளது. இதனை அல்ஜீரியாவில நிகழ்ந்தது போன்ற வழிமுறை மூலம் சரி செய்யும் நிலை ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். எகிப்தில் இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களிடம் எந்தவித ஆயுதமும் இல்லை. அவர்களிடம் இருப்பதெல்லாம் சட்டபூர்வமான மக்கள் மயப்படட வழிமுறைகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.