எகிப்தை தற்போது ஆட்சி செய்து
வரும் இராணுவ சபையோடு அல்ஜீரியாவில் இருபது வருடங்களுக்கு முன்னர் நிழ்ந்தது போன்றதொரு
உள்நாட்டுப் போருக்கு இட்டுச் செல்லும் நிலை வராது என்று கலாநிதி ஸஃத் அல்கதாத்னி தெரிவித்துள்ளார்.
கலைக்கப்பட்ட எகிப்திய பாராளுமன்றத்தின் சபாநாயகரும் சுதந்திதிரத்துக்கும் நீதிக்குமான
கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவருமான கதாத்னி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தொடர்ந்தும் பல வருடங்கள்
தாம் ஆட்சியில் இருக்க முடியும்படி பல புதிய திருத்தங்களை இராணுவ சபை மேற்கொண்டுள்ளது.
இதனை அல்ஜீரியாவில நிகழ்ந்தது போன்ற வழிமுறை மூலம் சரி செய்யும் நிலை ஏற்படாது என்று
தெரிவித்துள்ளார். எகிப்தில் இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களிடம் எந்தவித ஆயுதமும் இல்லை.
அவர்களிடம் இருப்பதெல்லாம் சட்டபூர்வமான மக்கள் மயப்படட வழிமுறைகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.